விக்கிப்பீடியா:நீக்கல் கொள்கை
தமிழ் விக்கிபீடியாவின் கொள்கைகள் |
---|
ஐந்து தூண்கள் |
தமிழ் விக்கிபீடியாவின் உள்ளடக்கம் |
நடுநிலை நோக்கு |
தமிழ் விக்கிபீடியாவில் பங்கேற்புச் சூழல் |
கண்ணியம் |
விக்கிப்பீடியா நீக்கல் கொள்கை என்பது தமிழ் விக்கிப்பீடியாவில் பக்கங்களை நீக்குவதற்கான வழிகாட்டியாகும். யாரும் தொகுக்கக்கூடிய கலைக்களஞ்சியமாகையால் தேவையற்ற பக்கங்களை நீக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய வழிகாட்டியாகும்.
நீக்கப்பட்ட பக்கத்தின் நடப்புப் பதிப்பும், வரலாறும் பொதுப் பார்வையிலிருந்து மறைக்கப்படும். பொதுவாகப் பக்கங்களில் சேதம் விளைகையில் எந்தப் பயனரும் அவற்றை மீளமைக்க முடியும் ஆனால் நிர்வாகி அணுக்கம் கொண்டோராலே அவற்றை நீக்கவும், நீக்கியதைக் காணவும், நீக்கியதை மீளமைக்கவும் இயலும். இத்தகைய செயல்பாடுகள் எல்லாம் நீக்கல் பதிகை மற்றும் நீக்கல் புள்ளிவிவரத்திலும் பதிவாகும். பொதுவாக ஏதேனும் நீக்கல் தொடர்பாக சமூகத்தின் இணக்க முடிவிற்கு காத்திருக்கும் வேளையில் நிர்வாகிகள் நீக்கமாட்டார்கள்.
நீக்கல் காரணங்கள்
[தொகு]ஒரு பக்கத்தை நீக்க கீழ்க்கண்ட காரணங்கள் ஏற்புடையதாகும். கீழ்க்கண்ட காரணங்கள் மட்டும்தான் அல்ல என்பதையும் கவனத்தில் கொள்க.
- உள்ளடக்கமானது துரித நீக்கல் தகுதிகளில் ஏதேனும் ஒன்றைப் பெற்றிருந்தால்.
- பதிப்புரிமை மீறலோ கட்டுப்பாடுள்ள உள்ளடக்கம் கொண்ட பகுதிகளோ இருந்தால்.
- சேதப்படுத்தல், விசமமான வழிமாற்று, மிரட்டல் பக்கம், ஒழுங்கற்ற நடை, அல்லது பயனிலாத்தவை.
- உரிய களஞ்சியத் தகவலில்லாமல் விளம்பரமாகவோ எரிதமகவோ இருந்தால்
- உள்ளடக்கத் திரிபு அதாவது ஏற்கனவே உள்ள தலைப்பிற்கு மீண்டும் எழுதப்பட்டவை (வழிமாற்றியோ, இணைப்போ பொருந்தாதபோது)
- நம்பத்தகுந்த மூலம் அற்றோ, புத்தாக்க ஆய்வாகவோ, வதந்தியாகவோ இருந்தால்
- மெய்யறிதன்மை செய்ய இயலாத கட்டுரையோ, நம்பத்தகுந்த மூலம் கிடைக்காத நிலையிலோ இருந்தால்
- குறிப்பிடத்தக்கமை இல்லாத கட்டுரையாக இருந்தால்
- வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாற்றுக் கொள்கைக்கு முரணாக இருந்தால்
- தேவையற்ற அல்லது ஒரேமாதிரி வார்ப்புரு பக்கங்கள்
- பகுப்பைக் காட்டும் பக்கங்கள்
- கட்டுப்பட்ட உள்ளடக்கம் கொள்கைக்கு முரணான பக்கங்கள்
- கட்டுரை, வார்ப்புரு, திட்டம், பயனர் போன்ற ஒவ்வொரு பெயர்வெளிகளுக்கும் முரணான பயன்பாட்டில் உருவான பக்கங்கள்
- தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று கொள்கைக்கு முரணான கட்டுரைகள்
- முதன்மைப் பக்கமில்லாமல் இருக்கும் பயனர் வெளி தவிர கட்டுரை, வார்ப்புரு, திட்டம் போன்றவற்றின் பேச்சுப் பக்கங்கள்.
நீக்காமல் செய்யக்கூடியவை
[தொகு]- மேம்பாடு பக்கத்தை நீக்காமல் மேம்படுத்த இயலும் என்றால்
- நீக்குவதற்குப் பதிலாக குறிப்பிட்ட தொகுப்பை மீளமைக்கலாம்.
- பயனரின் பேச்சுப் பக்கத்திலோ கட்டுரையின் பேச்சுப்பக்கத்திலோ கருத்திட்டு மேம்படுத்தக் கூறலாம்.
- முடிவெடுக்க சிக்கலான தருணங்களில் நீக்கலுக்கான வாக்கெடுப்பு நடத்தலாம்.
- அடையாளமிடல் பக்கத்தை உடனே நீக்காமல் உரிய வகையில் அடையாளமிடலாம்.
- சரியான வார்ப்புருவைச் சேர்ப்பதன் மூலம் துப்புரவு செய்யவும், படிப்பவர்களை ஈடுபடுத்தவும் செய்யலாம். சில வார்ப்புருக்கள்
- {{cleanup}} கட்டுரையைச் செம்மைப்படுத்தல்
- {{expert-subject}} நிபுணரின் கவனத்திற்குட்படுத்தல்
- {{npov}} நடுநிலைமை கேள்விக்குட்படுத்தல்
- {{stub}} குறுங்கட்டுரையைச் சுட்டிக்காட்டல்
- {{refimprove}} மெய்யறிதன்மை கோரல்
- {{merge}} கட்டுரைகளை ஒன்றிணைத்தல்
- ஒன்றிணைத்தல் பக்கத்தை நீக்காமல் வேறு பக்கத்துடன் இணைக்கலாம்
- சிறிய கட்டுரையோ அல்லது விரிவாக்க இயலாத கட்டுரையையோ ஒன்றிணைக்கலாம். உதாரணம்: ஒரே சம்பவத்தால் அறியப்பட்டவருக்குத் தனிக்கட்டுரை உருவாக்குவதற்குப் பதில் அந்தச் சம்பவக் கட்டுரையில் செய்தியைச் சேர்க்கலாம். குறிப்பிடத்தக்கவரின் உறவுகளுக்குத் தனிப்பக்கம் என்பதற்குப்பதில் அதே பக்கத்திலேயே சேர்க்கலாம்.
- வழிமாற்றலாம்
- ஒரே அக்கத்திற்கு பல தலைப்புகளில் கட்டுரை உருவாகுமேயானால் அவற்றை வழிமாற்றியாக வழங்கலாம். (உதா) ஒவ்வொரு நாட்டிலும் வழங்கப்படும் பெயர்கள்) அல்லது வாக்கெடுப்பு நடத்தில் இணக்க முடிவிற்கு வரலாம்.
- மிகுந்த உழைப்புடன் எழுதப்பட்ட ஆக்கமானதை உடனே நீக்கப்படாமல் பயனர் பக்கத்திற்கு நகர்த்தி அப்பயனரை மேம்படுத்தச் சொல்லலாம்.
நீக்கலுடன் செய்ய வேண்டியவை
[தொகு]- நீக்கலுக்குத் தகுதியான பக்கத்தை நீக்கும் போது அதற்கான காரணத்தைச் சுருக்கத்தில் இடவேண்டும்.
- அதனுடன் தொடர்புடைய அதாவது பேச்சுப்பக்கமோ, இணைத்த பக்க இணைப்போ சேர்த்து மாற்ற வேண்டும்.