விக்கிப்பீடியா:தொகுப்புச் சொற்போரின் போது அமைதியாக இருங்கள்
Appearance
இப்பக்கம் சுருக்கமாக: உங்களது தொகுப்பினால் ஏற்படும் சொற்பூசல்களின் போது அமைதியாக இருங்கள். நல்லெண்ண நம்பிக்கை கொண்டிருப்பதுடன் அமைதியாக உங்களது கருத்துக்களைத் தெரிவியுங்கள். |
விக்கிபீடியா சில விரும்பத்தகாத சொற்பூசல்களைக் கண்டுள்ளது. எழிவரிகளில் இதுபோல் சொற்பூசல்களில் ஈடுபடுவது எளிதானது, குறிப்பாக எழிவரிகளில் இருக்கும் சமயத்தில் உடனடியாக பதில்களை வழங்க முடியும் வாய்ப்பு இருக்கும், ஆனால் தயவுசெய்து நாம் அனைவரும் இங்கு ஒரே காரணத்திற்காக இருக்கிறோம் என்பதையும் உங்கள் உரையாடலின் மறுமுனையில் ஒரு நபர் இருக்கிறார் என்பதையும் நினைவில் கொள்க.ஆனால் இத்தகைய சொற்பூசல்கள் வாக்குவாதத்திற்கு தான் வழிவகுக்கும் மேலும் விக்கிப்பீடியாவினை மகிழ்ச்சி குறைந்த ஒரு திட்டமாக அனைவரும் உணர்வதற்கு வழிவகுக்கும்.
நீங்கள் அமைதியாக இருப்பதற்கான சிறந்த உதவிக்குறிப்புகள்
[தொகு]அனுபவம் வாய்ந்த பங்களிப்பாளர்களின் உதவிக்குறிப்புகளின் சிறிய பட்டியல் இங்கே:
- யாராவது உங்களுடன் உடன்படவில்லை என்றால், அதற்கான காரணத்தை நீங்கள் புரிந்துகொள்ள முயற்சிக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மற்றவர்களைக் கேளுங்கள், உங்கள் பரிந்துரை (கள்) ஏன் விரும்பத்தக்கது என்று நீங்கள் கருதுகிறீர்கள் என்பதை விளக்கவும் சிறிது நேரத்தையும் முயற்சியையும் எடுத்துக் கொள்ளுங்கள்.
- அவர்களுக்கு ஏதேனும் பெயரிடவோ, தனிநபர் விமர்சனம் அல்லது அவர்களின் திருத்தங்களையோ இழிவுபடுத்த வேண்டாம்.இயன்றவரை மற்ற பயன்ர்களிடம் நல்லெண்ண நம்பிக்கைகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இனவாத ", " பாசிச ", " கயவன் " "போன்ற சொற் பதங்கள் அவர்களை கோபமடையச் செய்வதுடன் அந்த பயனரை தற்காப்பு செய்யவும் வழிவகுக்கும்.
- பொறுமையாக செயல்படுங்கள். விவாதத்திற்கு கால அவகாசம் இல்லை. நீங்கள் கோபமாக இருந்தால், இடுகையிடுவதிலிருந்தோ அல்லது திருத்துவதிலிருந்தோ ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு நாள் அல்லது ஒரு வாரத்தில் திரும்பி வாருங்கள். நீங்கள் ஓய்வு எடுத்த சமயத்தில் நீங்கள் விரும்பிய மாற்றத்தை அல்லது கருத்தை வேறொருவர் செய்திருப்பதை நீங்கள் காணலாம்.
- முகபாவங்கள், குரலில் ஏற்ற இறக்கம் அல்லது உடல் மொழி இல்லாமல் வெறும் உரை மூலமே நமது கருத்துக்களை தெரிவிக்க இயலும் காரணத்தினால் மற்ற பயனர்களின் மனநிலையையும் நோக்கங்களையும் தவறாக மதிப்பிடுவது எளிதாகிவிடும், குறிப்பாக கருத்து வேறுபாடுகள் அல்லது விவாதங்கள் வாக்குவாதமாக மாறும் போது. உங்கள் திட்டங்களையும் பதில்களையும் தெளிவாக எடுத்து வைங்கள்; எதிர்க்கும் வாதங்கள் அல்லது விமர்சனங்களை கவனமாகக் கேளுங்கள்.
- சில நேரங்களில் நீங்கள் விலகி இருக்க வேண்டும். இங்கு சில நிர்வாகிகளும் உங்களுக்காக பொறுப்பேற்கக்கூடிய எண்ணற்ற பயனர்களும் உள்ளனர். ஒரு திருத்தத்தினால் ஏற்படும் சொற்போர் உங்கள் தனிப்பட்ட விக்கிபீடியா நேரத்தை மீற அனுமதிக்காதீர்கள். ஒரு திருத்தச் சொற் போரிலிருந்து சிறிது நேரம் ஒதுங்கி இருங்கள்; பிற கட்டுரைகளில் வேலை செய்யுங்கள் அல்லது விக்கிபீடியாவிலிருந்து சிறிது காலம் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். வேறு ஏதேனும் புதிய விடயங்களில் கவனம் செலுத்துங்கள் அல்லது சமையலறையில் ஒரு நல்ல சிற்றுண்டியை சமைக்கவும்.
- ஒவ்வொரு செயலும் விடயங்களை சிறப்பாகவோ அல்லது மோசமாகவோ செய்யப்போகிறதா என்று சிந்தியுங்கள். ஒரு செயல் விஷயங்களை மோசமாக்கினால், அதைச் செய்யாமல் இருப்பது பற்றி சிந்தியுங்கள்.
- சொற்போர்களை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். விக்கிபீடியா ஒரு பொழுதுபோக்கு தானே அன்றி இதி ஒரு கடமையோ அல்லது அர்ப்பணிப்போ அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு நல்ல சமூக உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள் மற்றும் ஒரு சமூகமாக நல்ல பங்களிப்புகளைச் செய்யுங்கள்.
- நினைவில் கொள்ளுங்கள், மனிதர்கள் எல்லா சமயத்திலும் சரியாக இருப்பது இல்லை - சில நேரங்களில் நாம் தவறு செய்யலாம்- சில நேரங்களில் நமது செயல் முழுவதும் தவறாக இருக்கலாம். நீங்கள் சொல்வது சரி என்று உங்களுக்குத் தெரிந்தாலும், நடைமுறையில் உள்ள கருத்தை ஒப்புக்கொள்வது நல்லது.