பாலினிய மொழி
பாலினிய மொழி | |
---|---|
Balinese Language Bhāṣa Bali Basä bali ᬪᬵᬱᬩᬮᬶ / ᬩᬲᬩᬮᬶ | |
நாடு(கள்) | இந்தோனேசியா |
பிராந்தியம் | பாலி, நுசா பெனிடா லொம்போக் |
இனம் |
|
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | தெரியவில்லை (3.3 மில்லியன் காட்டப்பட்டது: 2000)[1] |
ஆஸ்திரோனீசிய
| |
ஆரம்ப வடிவம் | பழைய பாலினியம்
|
பேச்சு வழக்கு | |
இலத்தீன் எழுத்துகள் பாலினிய எழுத்து | |
அலுவலக நிலை | |
மொழி கட்டுப்பாடு | பாலினிய மொழி, எழுத்து மற்றும் இலக்கிய நிறுவனம்[2] |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | ban |
ISO 639-3 | ban |
மொழிக் குறிப்பு | bali1278[3] |
பாலினியம் பெரும்பான்மை மொழி; முதன்மை மொழி
பாலினியம் இரண்டாம் மொழி
பாலினியம் சிறுபான்மை மொழி |
பாலினிய மொழி அல்லது பாலினியம் (ஆங்கிலம்: Balinese Language; இந்தோனேசியம்: Bhāṣa Bali; பாலினியம்: ᬪᬵᬱᬩᬮᬶ) என்பது ஆஸ்திரோனீசிய மொழிகள் மொழிக் குடும்பத்தின், மலாய-பொலினீசிய மொழிகள்; மலாயோ-சும்பாவான் மொழிகள் (Malayo-Sumbawan languages); பாலி–சாசாக்–சும்பாவா எனும் 3 துணைக் குடும்பங்களைச் சார்ந்த ஒரு மொழியாகும்.[4]
பாலி, நுசா பெனிடா, மேற்கு லொம்போக், தெற்கு சுமாத்திரா, சுலாவெசி ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களால் பாலி மொழி பேசப்படுகிறது. பாலி மொழி பேசும் பெரும்பான்மை மக்கள் இந்தோனேசிய மொழியையும் பயன்படுத்துகின்றனர்.[5]
2000-ஆம் ஆண்டு தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் பாலி மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை 3.3 மில்லியன் என அறியப்படுகிறது.
பொது
[தொகு]இருப்பினும், பாலி பண்பாட்டு நிறுவனம் 2011-ஆம் ஆண்டில் 1 மில்லியனுக்கும் குறைவானவர்கள், பாலி மொழியைத் தங்களின் அன்றாடப் பேச்சு வழக்கில் பயன்படுத்துவதாக மதிப்பிட்டுள்ளது. அதே வேளையில், குளோட்டோலாக் (Glottolog) என்பவரால் இந்த மொழி "ஆபத்தான நிலையில் இல்லை" என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.[6]
வகைப்பாடு
[தொகு]பாலி மொழி என்பது மலாய-பொலினீசிய (Malayo-Polynesian languages) குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஆஸ்திரோனேசிய மொழியாகும் (Austronesian languages). இது பாலி–சசாக்–சும்பாவா துணைக்குழுவின் (Bali–Sasak–Sumbawa languages) ஒரு பகுதியாகும். [6] உள்நாட்டில், பாலி மொழி என்பது மேட்டு நில பாலி மொழி, தாழ்நில பாலி மொழி மற்றும் நுசா பெனிடா பாலி மொழி என மூன்று தனித்துவமான வகைகளைக் கொண்டுள்ளது.[7]
2000-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தோனேசியாவில் பாலி மொழி 3.3 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது; முக்கியமாக பாலி தீவு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகமாகப் பேசப்படுகிறது
பயன்பாடு
[தொகு]2011-ஆம் ஆண்டில், பாலி பண்பாட்டு நிறுவனம் (Bali Cultural Agency), பாலி தீவில் தங்கள் அன்றாட வாழ்க்கையில் பாலி மொழியைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனைத் தாண்டவில்லை என்று மதிப்பிட்டுள்ளது. ஏனெனில் நகர்ப் புறங்களில் வாழும் பாலி பெற்றோர், இந்தோனேசிய மொழி அல்லது ஆங்கில மொழியை மட்டுமே முதல் மொழியாகத் தங்களின் பிள்ளைகளுக்கு அறிமுகப் படுத்துகிறார்கள்.
அதே வேளையில் இந்தோனேசிய நிறுவனங்கள்; மற்றும் பொது ஊடகங்களில், பாலி மொழி சார்ந்த அன்றாட உரையாடல்கள் மறைந்துவிட்டன. அந்த வகையில், பாலி மொழியின் எழுத்து வடிவத்திற்குப் பெரிய அளவில் அறிமுகம் கிடைக்கவில்லை; மற்றும் பாலி மக்களில் பெரும்பாலோர் பாலி மொழியை வாய்வழித் தொடர்புகளுக்காக மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பாலி மொழியின் எழுத்து முறை பெரிதும் குறைந்துவிட்டது.
பாலி மொழியின் உயிரோட்டம்
[தொகு]பாலி மக்கள் பெரும்பாலும், பாலி மொழியைத் தங்கள் அன்றாட பேச்சு வழக்கில், இந்தோனேசிய மொழியுடன் கலக்கிறார்கள்.
இருப்பினும், பாலி தீவுக்கு வெளியே உள்ள இட பெயர்வுப் பகுதிகளில், பாலி மொழி பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது; அதுவே பாலி மொழியின் உயிரோட்டத்திற்கு ஒரு முக்கிய பங்கு வகிப்பதாகவும் நம்பப்படுகிறது.[8]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ பாலினிய மொழி at Ethnologue (18th ed., 2015)
- ↑ "Peraturan Daerah Provinsi Bali No 1 Tahun 2018 Tentang Bahasa, Aksara, Dan Sastra Bali". Article 12, Regional Regulation இல. 1 of 2018.
- ↑ Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Balinese". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
- ↑ Clynes, Adrian (1995). Topics in the Phonology and Morphosyntax of Balinese (PhD thesis). Australian National University. எண்ணிம ஆவணச் சுட்டி:10.25911/5d77865d38e15. hdl:1885/10744.
- ↑ Clynes, Adrian (1994-01-31), Dutton, Tom; Tryon, Darrell T. (eds.), "Old Javanese influence in Balinese: Balinese speech styles", Language Contact and Change in the Austronesian World, Berlin, New York: DE GRUYTER MOUTON, pp. 141–180, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1515/9783110883091.141, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-088309-1, பார்க்கப்பட்ட நாள் 2022-11-05
- ↑ "Glottolog 4.3 - Balinese". glottolog.org. பார்க்கப்பட்ட நாள் 2021-04-27.
- ↑ Adelaar, K. Alexander (2005). "The Austronesian languages of Asia and Madagascar: a historical perspective". In Adelaar, K. Alexander; Himmelmann, Nikolaus (eds.). The Austronesian languages of Asia and Madagascar. London: Routledge. pp. 1–42.
- ↑ Ni Komang Erviani (March 30, 2012). "Balinese Language 'Will Never Die'" (in en). The Jakarta Post. http://www.thejakartapost.com/news/2012/03/30/balinese-language-will-never-die.html.
வெளி இணைப்புகள்
[தொகு]- Ager, Simon. "Balinese". Omniglot. Archived from the original on 9 March 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-03-07.
- The Balinese Digital Library.
- Widiadana R. A. & Erviani N. K. (29 January 2011). Ancient 'lontar' manuscripts go digital பரணிடப்பட்டது 2011-08-06 at the வந்தவழி இயந்திரம். The Jakarta Post.
- Erviani N. K. (14 January 2011). US scholar brings ancient Balinese scripts to digital age. The Jakarta Post.
- Paradisec open access recording of Balinese song.
- Kaipuleohone's Blust collection includes materials on Balinese, including RB2-006,RB2-009.
- பொதுவகத்தில் பாலினிய மொழி தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.